சிலாபம், குருசபாடுவ கடற்கரைப் பகுதியில் இருந்து இனந்தெரியாத நபரொருவரின் சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

மீனவர் ஒருவர் கொடுத்த தகவலுக்கு அமைய நேற்று இரவு இந்த சடலத்தை மீட்டுள்ளதாக சிலபாம் பொலிஸ் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

மேலும், உயிரிழந்துள்ள நபரின் முகம் இனங்காண முடியாத அளவிற்கு சிதைவடைந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சடலம் தற்போது சிலாபம் மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Facebook Comments