ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தள விமான நிலையம் ஆகியவற்றை அரச மற்றும் தனியார் கூட்டு நிறுவனங்களாக நடத்த சீன நிறுவனம் இணங்கியுள்ளது என அபிவிருத்தி வியூகம் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.

சீன அரசாங்கத்துடன் சம்பந்தப்பட்ட நிறுவனமே இதற்கு முன்வந்துள்ளதுடன் அதற்கான திட்டங்களை எற்கனவே வழங்கியுள்ளது.

கணக்கீட்டு நிறுவனங்கள் ஊடாக மத்தள விமான நிலையம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஆகியவற்றின் பெறுமதி மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது.

இதனடிப்படையில் சீன நிறுவனம் இணைத்து கொள்ள வேண்டிய பங்காளியை தீர்மானிக்கும்.

கடந்த அரசாங்கம் இந்த திட்டத்தை நாட்டுக்கு அனுகூலமற்ற வகையிலேயே முழுமையாக மேற்கொண்டுள்ளது.

நாங்கள சீன நிறுவனத்துடன் இணைந்து துறைமுகத்தையும் விமான நிலையத்தையும் நாட்டு அனுகூலமானதாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுப்போம் என அமைச்சர் மலிக் சமரவிக்ரம மேலும் கூறியுள்ளார்.

Facebook Comments