ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கு தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து கவலையடைவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தென் கொரியா சென்றுள்ள அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஊடகவியலாளர்களிடம் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,நாட்டின் தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்டு வரும் பழிவாங்கல்கள் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை குறித்து நான் உண்மையில் கவலையடைந்துள்ளேன்.

சனத் நிஷாந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றியவர்.

கூட்டு எதிர்க்கட்சி நடத்திய பாத யாத்திரை தென் கொரிய முழுவதும் பிரபலமாகியிருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Facebook Comments