இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் நோக்கில், அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற, நல்லிணக்கத்திற்கான கருத்து கோரும் நடவடிக்கை இன்று (சனிக்கிழமை) யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகின்றது.

யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (சனிக்கிழமை) காலை ஆரம்பமான இந்த நல்லிணக்க பொறிமுறைக்கான கருத்துப் பதியும் நிகழ்வில், கலந்து கொண்டுள்ள மக்கள் பல்வேறு விடயங்கள் குறித்து கருத்துரைத்துள்ளனர்.

இதன்போது, காணாமல் போனோர், யுத்த பாதிப்புக்குள்ளானவர்களுக்கான நட்டஈடு வழங்குதல், இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்தும் தமது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

முன்னதாக வேலணை, சண்டிலிப்பாய், கரவெட்டி, மருதங்கேணி, நல்லூர் ஆகிய பகுதிகளில் இந்த அமர்வு நடைபெற்ற நிலையில், ஐந்தாவது அமர்வு இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகின்றது.

 

Facebook Comments