நாமல் ராஜபக்ஷவை கைது செய்வதற்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவை காவற்துறையினர் புறக்கணித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் கடந்த ஜுலை 28ம் திகதி இந்த உத்தரவை விடுத்துள்ளது.

கொழும்பு பங்குச் சந்தையில் அரசியல் அதிகாரத்தை பயன்டுத்தி சட்டவிரோதமான பரிமாற்றங்களை மேற்கொண்ட குற்றச்சாட்டில் நாமல் ராஜபக்ஷவை கைது செய்ய உத்தரவிடப்பட்டது.

இந்த உத்தரவு விடுக்கப்பட்ட 9 தினங்கள் கடந்துள்ள போதும், இன்னும் அவர் கைது செய்யப்படவில்லை.

இந்த வழக்கில் நாமல் ராஜபக்ஷவே பிரதான சந்தேக நபர் என்று சட்ட மா அதிபர் திணைக்களமும் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments