பொரலஸ்கமுவ பகுதியில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றுக்குள் இன்று (சனிக்கிழமை) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பள்ளிவாசலின் நிர்வாக சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இன்று (சனிக்கிழமை) அதிகாலை ஒரு மணியளவில் பள்ளிவாசலுக்குள் புகுந்த இனந்தெரியாத இருவர், இந்த தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதன்போது, பள்ளிவாசலின் பணிபுரியும் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக குறிப்பிட்ட அவர் இது குறித்து, பொலிஸ் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டினைத் தொடர்ந்து ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Facebook Comments