தனுஷ் தனது மாமனார் ரஜினியின் ஜோடியை வளைத்துப் போட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அது என்னவென்பதை கீழே பார்ப்போம்…

ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் ‘கபாலி’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ராதிகா ஆப்தே. இப்படத்தை தொடர்ந்து அவருக்கு தொடர்ந்து தமிழில் நடிப்பதற்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில், தனுஷ் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் நடிக்க ராதிகா ஆப்தேவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’ ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பாராஜ், அடுத்ததாக தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். இப்படத்தில்தான் ராதிகா ஆப்தேவை கதாநாயகியாக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இப்படம் ஆக்ஷன் திரில்லராக உருவாகவிருக்கிறது. வித்தியாசமான கோணத்தில் இப்படத்தை இயக்கப்போவதாக தெரிகிறது.

தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கும் ‘வடசென்னை’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்திலும் நடிக்கவிருக்கிறார். அதன்பிறகு, கார்த்திக் சுப்பாராஜின் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook Comments