திருகோணமலை மாவட்டம் மொராவகன் புலம் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் மரணமடைந்துள்ளார்.

திருகோணமலை மொராவகன் புலத்தினைச் சேர்ந்த பேரின்பராசா தனபாலசிங்கம் (40) என்ற 4 பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி கடந்த 2ஆம் திகதி அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாகத் தெரியவருவது,

குறித்த போராளியான பேரின்பராசா தனபாலசிங்கம் கடந்த மாதம் 29ஆம் திகதி உந்துருளியில் பயணம் செய்துகொண்டிருந்தபோது சிறு விபத்துக்குள்ளாகி திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று முதலாம் திகதி வீடு வந்து சேர்ந்தார்.

பின்னர் 02ஆம் திகதி தலையில் விறைப்புத்தன்மையாக இருக்கின்றது எனக் கூறி மீண்டும் சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின் அங்கிருந்து அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவர் 1990ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து விடுதலைக்காக போராடி கடந்த 2013ஆம் ஆண்டு புனர்வாழ்வின்பின் விடுதலையானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Facebook Comments