இலங்கையின் முன்னாள் மற்றும் சமகால ஜனாதிபதிகளின் புதல்வர்களுக்கிடையில் அதிகார மோதல் நிலை தீவிரம் பெற்றுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் நாமல் ராஜபக்ஷவுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தஹாம் சிறிசேனவுக்கும் இடையில் போட்டி நிலை அதிகரித்துள்ளது.

தஹாம் சிறிசேன பொலன்னறுவை ஏரிக்கு அருகில் BMW மோட்டார் வாகனத்தில் சாகசம் செய்வது போன்ற காணொளி ஒன்று இணையத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த காணொளி மஹிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமான ஒருவரின் பேஸ்புக் பக்கத்தில் பிரச்சாரம் செய்யப்பட்டது.

இந்த காணொளியின் உண்மைத் தன்மை குறித்து ஆராயப்பட்டது. இதன்போது இது, மஹிந்த ராஜபக்சவின் குழுவினரால் தயாரிக்கப்பட்ட காணொளி என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மோட்டார் வாகன சாகசத்தை மாத்தளை மாவட்டத்தை சேர்ந்த மதுஷ்க திஸாநாயக்க என்ற இளைஞரினால் நடத்தப்பட்டுள்ளதுடன், அவரது நண்பர்களாக மோட்டார் வாகன சாகசத்தை தம்புள்ள கண்டம ஏரி பிரதேசத்தில் அருகில் மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஏமாற்று அரசியலை முன்னெடுத்து வந்த மஹிந்த அன்ட் கம்பனி, தற்போது ஜனாதிபதி மைத்திரியின் குடும்பத்தை இலக்கு வைத்து தமது நடவடிக்கை முன்னெடுத்து வருகின்றனர்.

இதனொரு கட்டமாக ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்திற்கு எதிராக இவ்வாறு சேரு பூசும் நடவடிக்கையை மேற்கொண்டு மீண்டும் மக்களை ஏமாற்றும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மஹிந்தவின் ஆதரவாளர்களினால் தயாரிக்கும் சேரு பூசும் காணொளிகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில் மஹிந்த தரப்புக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

Facebook Comments