ஒரு காலத்தில் இணையம் என்றாலே அது Yahoo தான் என்றிருந்தது. மிகப் பெரிய இணையத்தள பூதமாக இருந்த Yahoo, பல நிறுவனங்களை வாங்கும் அளவிற்கு இருந்த Yahoo, இன்று தனது மதிப்பை இழந்து வெறும் $4.8 பில்லியன் டாலருக்கு Verizon நிறுவனம் வாங்கும் நிலைக்கு வீழ்ச்சியடைந்திருக்கிறது. எல்லா விசயங்களையும் Yahoo வில் தேடிய காலம் மாறி, யாகூவை கூகுளில் தேடும் காலம் உருவானது.

1994-ம் ஆண்டு டேவிட் பிலோ மற்றும் ஜெர்ரி யாங் என்பவர்களால்  “Jerry and David’s Guide to the World Wide Web” என்ற சர்ச் இஞ்சின் தொடங்கப்பட்டது. சில மாதங்களில் Yahoo என மாற்றப்பட்டது.

யாகூ நியூஸ், ஃபைனான்ஸ், ஸ்போர்ட்ஸ், இமெயில், சமூக தளங்கள், விளம்பரங்கள், யாகூ ஃபோட்டோஸ், என எல்லாவற்றையும், ஒருங்கிணைத்தது யாகூ. எல்லா தகவல்களையும் அதன் தளத்திலேயே இடம்பெறச் செய்தது. ஆனால், அதுதான் பலருக்கு பிடிக்காமல் போவதற்கும் காரணமாய் அமைந்தது.

Yahoo ஒரே தொழில் மாதிரியை கடைபிடிக்காமல், தாங்கள் ஊடக (media) நிறுவனமா அல்லது ஒரு தொழில்நுட்ப நிறுவனமா (technology company) என்ற கேள்விகளுக்கு தெளிவில்லாமல் இருமுகதன்மையை பின்பற்றியது.

1998 ஆம் ஆண்டு கூகுளின் நிறுவனர்களான லேரி பேஜும், செர்ஜெரி ப்ரினும் அவர்களின் PageRank system தொழில்நுட்பத்தை யாகூவிடம்  $1 மில்லியன் டாலருக்கு விற்க முயன்றனர். அவர்களின் PageRank system தொழில்நுட்பம் மிக விரைவாக தகவல்களை மற்ற இணையத்தளத்திலிருந்து தேடி கொடுக்கும். ஆனால் Yahoo நிறுவனம் எல்லா தகவல்களையும் தங்கள் தளத்திலேயே இடம்பெற செய்து இணைய பயனர்கள் தங்கள் தளத்திலேயே அதிக நேரம் செலவிடவேண்டும் என்று எண்ணி Google ன் PageRank system தொழில்நுட்பத்தை நிராகரித்தது.

Facebook Comments