மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் ஊடகப் பேச்சாளராக மாறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

மினுவங்கொட பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அனுரகுமார திஸாநாயக்க அவருக்கு கிடைக்க வேண்டிய எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்காத காரணத்தினால் மன வேதனையில் இருப்பதாகவும் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார்.

Facebook Comments