கூட்டு அரசாங்கத்தை 5 வருடங்களுக்கு நீடித்திருப்பதானது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் அடிமையாக்குவதாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

உடன்படிக்கை காலத்தை நீடிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவிடம் அனுமதி பெறப்படவில்லை எனவும் விரைவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் அன்னப் பறவை சின்னத்தில் போட்டியிட நேரிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

உடன்படிக்கையை 5 வருடங்களுக்கு நீடிக்க உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர்கள் கூட்டாக அறிவித்தனர்.

Facebook Comments