சுங்க வரி செலுத்தாது இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகமான செல்போன்கள் உட்பட இலத்திரனியல் பொருட்களுடன் நான்கு பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கொனஹேன முகாமின் அதிகாரிகள் குழுவொன்று மேற்கொண்ட தேடுதலில் விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் பிரதான வாயிலில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2 ஆயிரத்து 309 செல்போன் மற்றும் டெப்கள், சிப்கள், செல்போன் உதிரி பாகங்கள், சிகரட்டுக்கள், முக அழங்கார திரவியங்கள் என்பன அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவற்றின் பெறுமதி இரண்டு கோடியே 34 இலட்சத்து 33 ஆயிரத்து 978 ரூபா என அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நான்கு பேரும் மேலதிக விசாரணைகளுக்காக சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். சுங்க அத்தியட்சகர் சந்தேக நபர்களுக்கு 21 இலட்சம் ரூபா அபராதம் விதித்துள்ளார்.

Facebook Comments