சவூதி அரேபியாவில் ஒரு மசூதி மீது நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஏமனின் எல்லையை ஒட்டியுள்ள பகுதியான அபாவில் பாதுகாப்புப் படையினர் வழிபட்டுவந்த மசூதியிலேயே தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக சவூதியைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

மே மாதத்தில் ஒரு ஷியா மசூதி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐஎஸ் குழு பொறுப்பேற்றிருந்தது. ஏமனில் ஷியாக்கள் தலைமையின கலகக் குழுவினருக்கு எதிரான தாக்குதல்களில் சவூதி அரேபியா நடத்திவருகிறது.

குறித்த தகவல் பற்றி சவூதி அரேபியா தொலைக்காட்சி 17 பேர் பலியாகியுள்ளதாக வெளியிட்டுள்ளது .

இணைப்பு 2

சவூதி அரேபியாவில் Abha city யில் உள்ள ஒரு பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளாதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலை ஐஎஸ்ஐ நடத்தி உள்ளதாக அங்குள்ள செய்தி சானல்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த தாக்குதலில் 30 க்கும் அதிமாகமானோர் படுகாயமடைந்ததுள்ளார்கள். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சவுதியில் நடந்த தாக்குதலில் 21 பேர் பரிதாபமாக பலியானர்கள்.

ஏமனின் எல்லையை ஒட்டியுள்ள பகுதியான அபாவில் பாதுகாப்புப் படையினர் வழிபட்டு வந்த மசூதியிலேயே தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக சவூதியைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

மே மாதத்தில் இரு ஷியா மசூதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐஎஸ் குழு பொறுப்பேற்றிருந்தது. ஏமனில் ஷியாக்கள் தலைமையின கலகக் குழுவினருக்கு எதிரான தாக்குதல்களில் சவூதி அரேபியா நடத்திவருகிறது.

தற்போது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கும் பலரும் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் என சவூதி தொலைக்காட்சிகள் தெரிவிக்கின்றனர்.

உள்நாட்டுப் பாதுகாப்பிற்கான அதிரடிப் படையினரால் அந்த மசூதி பயன்படுத்தப்பட்டுவந்தது.

இந்தத் தாக்குதலை யார் நடத்தியது என்பது இதுவரை தெளிவாகவில்லை. எந்தக் குழுவும் இதுவரை இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்கவில்லை. கடந்த மாதம் சவூதி அதிகாரிகள் ஐஎஸ் குழுவைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் 431 பேரைக் கைதுசெய்தனர்.

நாட்டில் உள்ள மசூதிகள் மீதும் பாதுகாப்புப் படையினர் மீதும் தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டிருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இன்றைய தாக்குதலில் 91 பேர் இறந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.

Facebook Comments