ஊழல், மோசடிகள் சமபந்தமாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை மறைக்கவே கூட்டு எதிர்க்கட்சியினர் பாத யாத்திரையை ஒழுங்கு செய்ததாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் நகரில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டு மக்களை அச்சுறுத்துவதற்காக கூட்டு எதிர்க்கட்சியினர் இந்த பாத யாத்திரையை ஏற்பாடு செய்தனர்.

மோசடியாளர்களுக்கு எதிரான விசாரணைகள் துரித்தப்படுத்தப்பட வேண்டும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனநாயக கட்சியாக மாற வேண்டும்.

எனக்கு இல்லை என்றால் எவருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எவருக்கும் இல்லை என்பதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்த முயற்சிப்பவர்களின் நோக்கம் எனவும் சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Facebook Comments