ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு எதிராக அடுத்த இரண்டு வாரங்களுக்குள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு தொடரப்படும் என சட்டமா அதிபர் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாமல் ராஜபக்சவிற்கு சொந்தமான என்.ஆர். அசோசியேட்ஸ் சட்ட நிறுவனம் மேற்கொண்ட கொடுக்கல், வாங்கல்கள் மற்றும் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துக்கள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது.

இதனை தவிர முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவிற்கு எதிராக பல குற்றச்சாட்டுக்களின் கீழ் இரண்டாது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட உள்ளதாக சட்டமா அதிபர் திணைக்கள தகவல்கள் மேலும் கூறியுள்ளன.

இவற்றை தவிர கடந்த ஆட்சிக்காலத்தில் சட்டவிரோத செயல்கள் சம்பந்தமாக அரசியல்வாதிகள், சிரேஷ்ட அரச அதிகாரிகளுக்கு எதிராக 13 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு தொடரப்படவிருப்பதாக கூறப்படுகிறது.

Facebook Comments