பாகிஸ்தானின் தலைமை விமான பணியாளரும் தலைமை விமான படை தலைவருமான சோஹாலி அமன் இன்று காலை இலங்கையை வந்தடைந்துள்ளார்.

மேலும் இந்த இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட சோஹாலி அமன்,இலங்கை விமான படை தளபதி, விமான படை தலைவர் ஜி.பீ புலத்சிங்களவின் அழைப்பின் பேரில் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,பிரதமர் ரணில் விக்ரமசிங்க,பாதுகாப்பு செயலாளர்கள் மற்றும் உயர் இராணுவ அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஜயம் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது நோக்கில் அமையும் எனவும்குறிப்பிடப்பட்டுள்ளது.

Facebook Comments