சிலாபம் பிரதேசத்தில் 25 வயதுடைய பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இவர் பேஸ்புக் மூலமாக ஜப்பானில் தொழில் புரியும் நபரொருவரை கடந்த 3 மாதங்களாக காதலித்து வந்துள்ளார்.

இந்தநிலையில், குறித்த நபரின் தாயாருக்கு இவர்கள் திருமணம் தொடர்பில்விருப்பமில்லை என்பதை அறிந்த இவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக தகவல்கள்தெரிவிக்கின்றன.

குறித்த யுவதி தற்கொலை செய்ய முதல் தனது பேஸ்புக்கில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

‘அவருக்கு என்னுடைய உண்மையான அன்பு. புரிந்து என்னை தேடி வரும் போது நான்இவ்வுலகில் இல்லை என்றால்…!

ஐயோ தயவு செய்து சொல்லுங்கள் என்னுடைய உண்மையான காதலை அவருக்கு’ என்று பதிவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments