அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள உள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ் கைதிகளை நேற்றைய தினம் சந்திக்க சென்ற போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இதனை தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், நாளைய தினம் தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரத போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க இருப்பதாகவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Facebook Comments