யாழ்ப்பாணம் வடலியடைப்பு பகுதியில் இன்று அதிகாலை பச்சிளம் குழந்தை அநாதரவான நிலையில் மீட்பு

யாழ்ப்பாணம் இளவாலை வடலியடைப்பு பகுதியில் பிறந்து 20நாட்களேயான குழந்தை ஒன்று இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.

குறித்த குழந்தை பெட்டி ஒன்றில் இடப்பட்டு, வடலியடைப்பு பகுதியில் வீதி யோரமாக வைக்கப்பட்டிருந்த நிலையில், பொது மக்கள் தகவல் வழங்கிய நிலையில், இளவாலை பொலிஸார் அதனை உயிருடன் மீட்டுள்ளனர்.

தெல்லிப்பளை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குறித்த குழந்தை, தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொ ண்டு வருகி ன்றனர்

Facebook Comments