விழிப்புலன் பாதிக்கப்பட்டோரின் சத்தப்பந்து கிரிக்கட் போட்டி இன்று கிளிநொச்சியில்

 

கண் பார்வை அற்றோர் கிரிக்கட் விளையாடுகின்றார்கள் என்றால் அது நம்புவது கடினம். ஆனால் அவ்வாறானதொரு புதிய முயற்சியை இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கு எங்கிலும் வாழும் தமிழ் மாற்றுத் திறனாளிகள் முன்னெடுக்கின்றார்கள். ஓசை கொண்ட பந்து அவர்களுக்கு உதவுகின்றது.

 

அவாறான விழிப்புலன் பாதிக்கப்பட்டோர் விளையாடும் சத்தப்பந்து கிரிக்கட் போட்டி இன்று  திங்கள்கிழமை  08.08.2016 , பரந்தன் இந்து மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது .

 

யாழ் விழிப்புலனற்றோர் சங்கத்தின் இணைப்பில்  உரிமை நிறுவனம் நடத்தும்  தமிழ் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி 2016 ம் ஆண்டின் ,   இன் முதல் போட்டியாக  விழிப்புல‌ன் பாதிக்கப்பட்டோருக்கான   சத்த‌ பந்து கிரிக்கெட் போட்டி இன்று காலை ஒன்பது மணியளவில்  பரந்தன்  இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது

 

முப்பது  பந்துப் பரிமாற்றங்களைக்  கொண்டு  நடத்தப்பட்ட இவ் சத்தப்பந்து கிரிக்கட் போட்டியில் வடக்கு வாழ் விழிப்புலன் பாதிக்கப்பட்டோர் அணிக்கும் கிழக்கு வாழ் விழிப்புலன் பாதிக்கப்பட்டோர் அணிக்கும் இடையில் நடைபெற்றது

நாணயச் சுழட்சியில் வெற்றிபெற்ற வடக்கு வாழ் விழிப்புலன் பாதிக்கப்பட்டோர் அணி துடுப்பாட்டத்தினை தீர்மானித்து முப்பது பந்துப் பரிமாற்றங்களினை எதிர்கொண்டு   ஏழு விக்கற் இழப்பிற்கு இருநூற்று அறுபத்து ஏழு ஒட்டங்களினைப் பெற்றனர் தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய கிழக்கு வாழ் விழிப்புலன் பாதிக்கப்பட்டோர் அணியினர்  இருபத்து ஏழு பந்துப் பரிமாற்றத்தின் இறுதியில் ஒன்பது  விக்கற் இழப்பிற்கு இருநூற்றி அறுபத்தி எட்டு ஒட்டங்களினைப் பெற்று வெற்றியினைத் தமதாக்கிக் கொண்டனர்

 

 

அடுத்த நிகழ்வாக 20.08.2016 இல் சக்கர நாட்காளி கூடைப்பந்தாட்டப்போட்டிகள் வவுனியாவில் நடைபெற உள்ளது.எனவும்  இறுதிப் போட்டிகள் மட்டக்களப்பில் 28.08.2016இலும் வவுனியாவில் 04.09.2016 இலும் நடைபெறவுள்ளன.என ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்  அத்துடன்

அவர்களுக்கான இவ்விளையாட்டு போட்டிகளில் உங்கள் பங்களிப்பை வழங்குமாறு தமிழ் மாற்று திறனாளிகள் அன்பாக கேட்டுக் நிற்கின்றனர்

 

cricket1 cricket2 cricket4 cricket3

Facebook Comments