மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிற்றூழியர்கள் இன்று காலை முதல் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமது செயற்பாடுகளில் வைத்தியசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் தலையிடுவதாக கோரியும் தமக்காக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளரை மாற்றக்கோரியும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை தாங்கள் கையெழுத்திடும்புத்தகத்தில் வைத்தியசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் கோடுகளை இட்டு தமது கடமைகளில் குறுக்கிட்டதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

வைத்தியசாலை நிருவாகத்தின் உயர் அதிகாரிகளை தவிர வேறு யாரும் தமது கடமைகளில் குறுக்கிடமுடியாது எனவும் தாங்கள் சுதந்திரமாக கடமையாற்ற அனுமதிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

வைத்தியசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர் அவ்விடத்தில் வந்தபோது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டதுடன் பொலிஸார் தலையிட்டு பதற்றத்தினை தனித்தனர்.

தொடர்ந்து சிற்றூழியர்களின் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருவதன் காரணமாக வைத்தியசாலையின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Facebook Comments