வெயங்கொட பிரதேசத்தில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா ஒன்றில் உள்ள நீச்சல் தடாகத்தில் விளையாடிக்கொண்டிருந்த 9 வயது சிறுவன் ஒருவன் பலியாகியுள்ளான்.

சுற்றுலா ஒன்றை மேற்கொண்டு தனது குடும்பத்தாருடன் குறித்த பிரதேசத்திற்கு சென்ற மாணவனே இவ்வாறு பலியாகியுள்ளதாக வெயங்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த சிறுவன் சியஒலாபே பகுதியைச் சேர்ந்தவர் என்றும், இவரது சடலம் கம்பஹா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீச்சல் தடாகத்தில் இருந்து சடலம் மீட்பு!

ஹபராதுவ அகுலுகஹா பகுதியில் உள்ள நீச்சல் தடாகம் ஒன்றில் இருந்து சடலம் ஒன்றுமீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த சடலம் நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் அஹன்கம பகுதியை சேர்ந்த 56 வயதடைய நபர் என பொலிஸார்தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் நேற்றிரவு தன் ஏழு நண்பர்களுடன் விருந்து ஒன்றுக்காக ஹோட்டலிங்குவருகை தந்தார் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸார்குறிப்பிட்டுள்ளனர்.

இருப்பினும் இவருடைய மரணம் குறித்து உறவினர்கள் அவ நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக இன்று வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்க உள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Facebook Comments