கூட்டுஎதிர்கட்சியினால் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட பாதயாத்திரையில் கலந்துக்கொண்டவர்களின் கைகளில் மதுபான போத்தல்கள் காணப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த பாதயாத்திரையில் கேகாலை பிரதேசத்தில் 1500 பேர் மாத்திரமே கலந்துக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதில் மில்லியன் கணக்கானவர்கள் கலந்துக்கொண்டதாக கூட்டுஎதிர்கட்சியின் பலரும் வாய்க்கு வந்த எண்ணிக்கையினை தெரிவிப்பதாகவும், ஆனால் உண்மையில் இரண்டாயிரம் பேரே கலந்துக்கொண்டதாகவும் சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.

நேற்று சப்புகஸ்கந்த பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வென்றில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டையில் இருந்து பஸ்வண்டிகள் மூலம் ஆட்கள் கொண்டு வந்து லிப்டன் சுற்றுவட்டத்தில் இறக்கப்பட்டதாகவும்,அவர்கள் கையில் மதுபான போத்தல்கள் காணப்பட்டதோடு இவர்கள் தள்ளாடியவாரே பஸ்களில் ஏறியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இவ்வாறான பாதயாத்திரைகளுக்கு தாம் பயப்பட போவதில்லை என்றும்,ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தமது கையில் உள்ளதாகவும், குறித்த திருடர்களால் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments