கனடாவில் வசிக்கும் ராம் சிவாவின் ராம் பவுண்டேசன் மூலம் கொழும்பு தேசிய அரச வைத்தியசாலைக்கு மாதாந்தம் கிளினிக் செல்ல கூட வசதி இல்லாத 4 பேருக்கு போக்குவரத்து செலவு, தங்குமிட, உணவு தேவைக்கான மாதாந்த பண உதவியின் முதல் மாத கொடுப்பனவு வெள்ளிக்கிழமை வவுனியா மாவட்ட சமூக சேவை திணைக்களத்தில் வைத்து தமிழ் விருட்சம் அமைப்பால் வழங்கி வைக்க பட்டது.

இரண்டு சிறுநீரகமும் பாதிக்கப்பட்டு கொழும்புக்கு சிகிச்சைக்கு சென்று வரும் மன்னார் உப்புக்குளத்தில் வசிக்கும் பசுபதி வேல்முருகு, இதய பிரச்சனை சம்மந்தமான சிகிச்சைக்கு கொழும்பு செல்லும் 1 ம் வட்டாரம், கைவேலி, புதுக்குடியிருப்பு முல்லைதீவில் வசிக்கும் செல்லத்துரை தயாபரன்,

வவுனியாவில் வசிக்கும் சுவாசக்குழாய் பிரச்சனை சம்மந்தமாக கொழும்பு சென்று வரும் 2 வயது குழந்தை ஸ்டிபினி, வவுனியாவில் வசிக்கும் சிறுநீரக பாதிப்பு காரணமாக சிகிச்சைக்கு சென்று வரும் 7 வயது குழந்தை திசாலினி ஆகியோருக்கே இந்த மாதாந்த கொடுப்பனவுகள் வழங்கி வைக்கபட்டன.

இந்த நிகழ்வில் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், சமூக சேவை திணைக்கள உத்தியோகத்தர்களான தவீசன், வசந்தன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்), செயலாளர் மாணிக்கம் ஜெகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் கருத்து தெரிவித்த மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ் .எஸ். வாசன்,

தமிழ் விருட்சம் பெயருக்கு ஏற்றால் போல் தன்னை தேடி வருபவர்களுக்கு நிழல் கொடுக்கும் மரம் போல தேடி வருபவர்களுக்கு உதவிகளை புலம் பெயர் உறவுகள் மூலம் செய்து வருவது பாராட்டுதலுக்குரியது என்றார்.

அந்தவகையில இன்று இந்த உதவிகளை வழங்கிய ராம் பவுண்டேசனுக்கு தனது வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்து கொண்டார்.

Facebook Comments