யாழ்.புங்குடுதீவு மாணவி சி.வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பான வழக்கு அடுத்த தவணையில் பரிசீலணைக்கு எடுத்து கொள்ளப்படும் என ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் வை.எம்.றியால் உத்தரவிட்டுள்ளார்.

மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பான வழக்கு விசாரணை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் இவ் வழக்கிற்கு வருகை தரும் வித்தியாவின் தாயாரை மேற்படி வழக்கின் சந்தேக நபர்களின் உறவினர்கள் சிலர் அச்சுறுத்தியிருந்ததாக வித்தியாவின் தாயாரால் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இவ் முறைப்பாட்டையடுத்து சந்தேகநபர்களையும் இவ் முறைப்பாட்டையும் ஊர்காவற்றுறை நீதிமன்றில் பொலிஸார் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.

இதன்போது இவ் வழக்கை பாதிக்கப்பட்டோரை பாதுகாப்பதற்கான சட்ட ஏற்பாட்டின் கீழ் பதிவு செய்திருந்ததுடன் இது தொடர்பான வழக்கு விசாரணையும் இடம்பெற்றுவருகின்றது.

இந்நிலையில் இவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சந்தேகநபரினை பிணையில் விடுவிப்பது தொடர்பான விண்ணப்பம் ஒன்றை அவர் தரப்பு சட்டத்தரணி மன்றில் முன்வைத்திருந்தார்.

இதற்கமைய இவ் விண்ணப்பத்தை அடுத்த வழக்கு தவணையில் பரிசிலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்த நீதவான் இவ் வழக்கு விசாரணையை எதிர்வரும் 22ஆம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Facebook Comments