மனைவியை மிரட்டி தனது நண்பரை வைத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கேகாலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் மனைவியை ஆயுதத்தினை வைத்து மிரட்டி தன் கண்முன்னே தனது நண்பருடன் உடலுறவு கொள்ள வைத்துள்ளார்.

இது சம்பந்தமாக, தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சமீபத்தில் கேகாலை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இதன்போது, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்பட்ட பெண்ணின் கணவருக்கும் அவரின் நண்பருக்கும் முதல் குற்றச்சாட்டிற்காக 12 வருட சிறைத்தண்டனையும், 2 ஆவது குற்றச்சாட்டிற்காக 10 வருட கடுங்கால சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. விதிக்கப்பட்ட இரு சிறைத்தண்டனையை ஒன்றாக அனுபவிப்பதற்கு 20 ஆயிரம் ரூபா தண்டை பணம் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் குற்றவாளிகள் தலா 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வீதம் 3 இலட்சம் ரூபாவினை பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு இழப்பீட்டு தொகையாக செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தன்னுடைய வழக்கினை பார்வையிட நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்த பாதிக்கப்பட்ட பெண் நீதிபதியினை இரு கரம் கூப்பி வணங்கி தலை சாய்த்து நன்றி தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Facebook Comments