இலங்கை – இந்தியாவிற்கு இடையில் மேற்கொள்ளப்படவுள்ள பொருளாதார மற்றும் தொழில்நுட்ப கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு, இந்திய மத்திய அரசின் பிரதிநிதிகள் அடங்கிய உயர்மட்டக் குழு, இன்று (செவ்வாய்க்கிழமை) இலங்கை வரவுள்ளது.

இவ்வாறு வருபவர்கள் குறித்த ஒப்பந்தம் தொடர்பில், பல்வேறு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளனர். அத்துடன், உத்தேச ஒப்பந்தத்தின் முதலாவது அதிகாரிகள் மட்ட பேச்சுவார்த்தை இதுவென்பதும் விசேட அம்சமாகும்.

இதேவேளை எதிர்வரும் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ள மனிதவள உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் நோக்கில், தகவல் தொழில்நுட்ப, உள்ளூராட்சி நிர்வாகம் மற்றும் நகர அபிவிருத்தி மத்திய அமைச்சர் கே.டி. ராமா ராஹோ தலைமையிலான குழுவினரும் இலங்கை வருகின்றனர். அவர்கள் நாளை (புதன்கிழமை) இலங்கை வருகின்றனர்.

உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்புடன் இணைந்து அரசாங்கம் மனித வள உச்சி மாநாட்டினை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Facebook Comments