கிளிநொச்சி – பளை பொலிஸாரால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விசேட சோதனையின் போது பெறுமதிமிக்க தேக்கமர குற்றிகள் மீட்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் எடுத்து செல்லப்பட்ட குறித்த மரக்குற்றிகளை பொலிஸார் எழுதுமட்டுவாள் பகுதியில் வைத்து மீட்டுள்ளனர்.

குறித்த குற்றிகளை ஏற்றிவந்த லொறிக்கு உதவியாக சென்றுகொண்டிருந்த மற்றுமொரு விறகேற்றிய வாகனமும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன், வாகனத்தை செலுத்தியவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லொறியில் பயணித்த நால்வர் தப்பி சென்றுள்ளனர். குறித்த நபர்களை கைது செய்யும் நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகவும், தொடர்ந்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

 

Facebook Comments