தீபிகா படுகோனேவுக்கு பத்மாவதி படத்தில் நடிக்க எதற்காக ரூ.12 கோடி கொடுக்கிறார்கள் என்று எங்களுக்கு தெரியாதாக்கும் என பாலிவுட் நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார். தீபிகா படுகோனே தான் பாலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் ஹீரோயின். அவர் பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின் பத்மாவதி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அந்த படத்தில் நடிக்க அவருக்கு ரூ. 12 கோடி சம்பளமாம்.

தீபிகா பத்மாவதி படத்தில் நடிக்க தீபிகாவுக்கு ரூ.12 கோடி ஒன்றும் சும்மா கொடுக்கவில்லை. அவர் படத்தின் லாபத்தில் பங்கு கேட்டுள்ளார். லாபத்தில் பங்கு அளிக்க முடியாது என்று கூறியே ரூ.12 கோடியை மட்டும் கொடுத்துள்ளனர்.

சம்பளம் நடிகைகளுக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கிறது என்பதை திரைத்துறையினர் மட்டுமே கண்டுகொள்வார்கள். மற்றவர்களுக்கு அவர்கள் ஒழுங்காக நடிக்கிறார்களா, இல்லையா என்பது மட்டுமே முக்கியம். அப்படி இருக்கும்போது இந்த பெருமை எதற்கு?

லாப பங்கு படத்தின் லாபத்தில் பங்கு கேட்கும் நிலையில் தீபிகா இருக்கலாம். ஆனால் ஒரு நடிகைக்கு லாபத்தில் பங்கு தரும் அளவுக்கு பாலிவுட் இல்லை. நடிகர்களுக்கு மட்டுமே லாபத்தில் பங்கு அளிக்கப்படுகிறது.

Facebook Comments