2020ஆம் வருடத்திற்குள் இலங்கையின் நகரங்களை மையப்படுத்தி இரண்டு இலட்சம் வீடுகளை நிர்மாணிக்கபடும் என பிரமதர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இலங்கை தேசிய நகர வேலைத்திட்டத்தின் கீழ் குழு ஒன்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.

பிரதமரின் ஆலாசகரான ஆர்.பாஸ்கரலிங்கத்தின் தலைமையின் கீழ் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுண் மகேந்திரன், வீடமைப்பு அமைச்சின் ஆலாசகர் டபிள்யு.அயிலப்பெரும மற்றும் சிறிவர்தன ஆகியோர் இந்தக் குழுவில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவிற்கு அரசினால் வழங்கும் நிதிக்கு அப்பால் தனியார் நிறுவனங்களின் முதலீடுகளையும் அதிகம் பெற்று இரண்டு இலட்ச வீடுகளை நிர்மாணிக்கும் இலக்கை வெற்றிக்கொள்ள இந்த குழு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த குழுவிற்கு மேல்மாகாண நகர அபிவிருத்தி அமைச்சு மற்றும் நீர்வழங்கள் நகர திட்டமிடல் அமைச்சும் ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Facebook Comments