நல்லிணக்க பொறிமுறை தொடர்பில் மக்கள் கருத்தறியும் செயலணியின் அமர்வு வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் இன்று காலை ஆரம்பமாகியுள்ளது.

காலை 9 மணி தொடக்கம் மாலை 4 மணிவரை நடைபெறவுள்ள இந்த கருத்தும் பெறும் அமர்வுக்காக 100 பேருக்கு அழைப்புக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அதன்படி சுமார் 30 பேர் வரையில் காலையில் வருகை தந்துள்ளதுடன் சாட்சியமளிப்புக்காக தமது விபரங்களை பதிவு செய்துள்ளனர்.

Facebook Comments