இலங்கையிலேயே முதன்முறை இணையத்தினூடாக போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு வழங்கப்படவுள்ளது.

இணையத்தின் மூலம் இயங்கக் கூடிய போக்குவரத்து மத்திய நிலையம் ஒன்று கண்டி நகரில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்கரணவக்க தெரிவித்துள்ளார்.

நேற்று கண்டி மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் எம்.பீ.ஹிட்டிசேகர தலைமையில் இடம்பெற்ற கண்டி நகர அபிவிருத்தி கூட்டத்தில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடைசி இராச்சியமான கண்டி நகரை வெவ்வேறு வழிகளில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் எனவும், இதன் ஒரு அங்கமாக இலங்கையின் முதல் தடவையாக இணையம்மூலம் கட்டுப்படுத்தப்படும் போக்குவரத்து திட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வின் போது உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல, எஸ்.பி.திசாநாயக்க உள்ளிட்டவர்கள் கலந்துக்கொண்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுளள்து.

Facebook Comments