இலங்கையில் எத்தனை ஜனாதிபதிகள் பதவியேற்றாலும் மைத்திரிபால சிறிசேனவே அதிஷ்டம்மிக்க ஜனாதிபதி என பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே இவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டு மக்களின் ஏகோபித்த அன்பும், நம்பிக்கையும் மைத்திரிக்கே காணப்படுகின்றது, சிறுபான்மை மக்களினதும், சிங்கள மக்களினதும் அன்பு மிக்கவர் இவர். இதனாலேயே நாட்டு மக்கள் மஹிந்தவை புறக்கணித்து மைத்திரியைஜனாதிபதியாக தெரிவுசெய்தனர்.

இந்தக் கருத்து மக்களின் கருத்துக்கணிப்பின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. என ஆனந்த அளுத்கமகே கூறினார்.

இதேவேளை, சுதந்திரக்கட்சி பிளவுபடுவதற்கு ஐக்கிய தேசிய கட்சியே காரணம் என்பதும் ஊர்ஜிதம் செய்யப்பட்டு விட்டது எனவும் இவர் தெரிவித்தார்.

மேலும், இடம்பெற்ற பாதயாத்திரையில் நன்மை ஐக்கிய தேசிய கட்சிக்கே, இதனை அறிந்து கொண்டே ஐ.தே.க சார்பில் எந்த விதமான தடைகளும் ஏற்படுத்தப்படவில்லை.

பிரதமரும் இதனை நன்கு அறிந்து கொண்டதன் காரணமாகவே அனைத்து சலுகைகளையும் பாதயாத்திரைக்கு வழங்குமாறு கூறியிருந்தார் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமமே தெரிவித்தார்.

Facebook Comments