சட்டவிரோத ஆயுதங்களை தம்மிடம் வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் அவரது மகன் ரவிந்து குணவர்தன உட்பட 6 பேருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இவர்களை ஆகஸ்ட் 22 ஆம் தகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு பிரிவினரின் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களின் அடையாள அட்டைகள் உட்பட பல பொருட்களையும் விடுவிக்குமாறு நீதவான் மேலும் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, 2011ஆம் ஆண்டு பிரபல வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை தொடர்பில் முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன உட்பட 6 பேருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments