அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை மாவடிப்பள்ளி பிரதான வீதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நாவிதன்வெளி பிரதேசத்தில் வேளாண்மை செய்கையை அறுவடை செய்வதற்காகச் சென்றிருந்த 3 பிள்ளைகளின் தந்தையான அப்துல் ஹக்கில் என்ற குறித்த விவசாயி, வீடு திரும்பாததை தொடர்ந்து உறவினர்கள் தேடியதில், அங்குள்ள வெற்றுக்காணியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த மரணத்தில் ஏற்பட்ட சந்தேகத்தையடுத்து சவளக்கடை பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின்போது, குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த இருவர், நேற்று (திங்கட்கிழமை) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவின் சடலம் கல்முனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை சவளக்கடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

Facebook Comments