வடக்கு வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் 2016 ஆம் ஆண்டுக்கான திட்டங்களின் மீளாய்வு ஒன்றுகூடல் – அமைச்சர் டெனிஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது…

வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சால் மாகாண அபிவிருத்தி நன்கொடை 2016 (PSDG) நிதி ஒதுக்கீட்டில், வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த ஒதுக்கீடுகளில் வடக்கின் 05 மாவட்டங்களிலும் வழங்கப்பட்ட அனைத்து அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான திட்ட மீளாய்வு ஒன்றுகூடல், வீதிஅபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது தலைமையில் 10-08-2016 புதன் மாலை 2.30 மணியளவில் யாழ்ப்பாணம் குருநகரில் உள்ள மாகாண வீதி அபிவிருத்தி திணைக்கள மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இவ் திட்ட மீளாய்வு ஒன்றுகூடலில் மாகாண சபை உறுப்பினர் வி.சிவயோகன், அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களப்பணிப்பாளர் டி.சிவராஜலிங்கம், ஐந்து மாவட்டங்களினதும் பிரதம பொறியியலாளர்கள், மாவட்ட பொறியியலாளர்கள், ஒப்பந்தக்காரர்கள் என சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் சமூகமளித்திருந்தனர்.

இவ் விசேட திட்ட மீளாய்வின்மூலம் இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட குறித்த நிதிகளுக்கான வேலைத்திட்டங்களை நேர்த்தியாகவும் விரைவாகவும் நிறைவு செய்து, மக்களது பயன்பாட்டிற்கு கொடுக்கவேண்டும் என்ற நோக்கமும், கொடுக்கப்பட்ட திட்டங்கள் சரியான முறையிலே இடம்பெறுகின்றதா என்பதை கவனிக்கும் வகையிலே அதாவது திட்டங்களை செயல்படுத்துவதோடு நின்றுவிடாது அவற்றை தொடர்ந்து கண்காணிப்பதும் அதனை தொடர் மேற்பார்வை மற்றும் மீளாய்வு செய்வதன் மூலம் இருக்கின்ற சில தடைகள் அல்லது திட்டங்களுக்குள்ள மேலதிக தேவைகள் போன்ற பல விடயங்களை சீர்செய்து, தமக்கு கொடுக்கப்பட்ட சொற்ப நிதியினைக்கொண்டு முடிந்த அளவுக்கு வடக்கு மாகாணத்தினை அபிவிருத்தி செய்யவேண்டும் என்பதே தமது மேலான நோக்கமாக இருப்பதாகவும் அமைச்சர் டெனிஸ்வரன் தெரிவித்தார்.

அத்தோடு இவ் ஒன்றுகூடலில் திட்டங்களை நிறைவு செய்துள்ள ஒப்பந்தக்காரர்களை பாராட்டியதோடு, இன்னும் நிறைவடையவுள்ள திட்டங்களின் கால எல்லைகள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டு, முடிவடையாத சில திட்டங்களுக்கு குறிக்கப்பட்ட கால எல்லைகள் வழங்கப்பட்டுள்ளதும் அறியமுடிகின்றது. இவ்வாறான திட்ட மீளாய்வுகளின் மூலம் மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகள் துரிதமடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

13680000_10210049005610826_2713926370705616187_o

13909264_10210049001330719_8486766694427731745_o

Facebook Comments