இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் உறவுகள் தொடர்பில் இருந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளதாக சீனாவின் தூதுவர் யி சியான்லியாங் தெரிவித்துள்ளார்.

சுகவீனத்தின் பின்னர் வீடு திரும்பிய சபாநாயகர் கரு ஜெயசூரியவை நலன்விசாரிப்பதற்காக சீன தூதுவர், கரு ஜெயசூரியவின் வாசஸ்தலத்துக்கு சென்றிருந்தார்.

இதன்போது கரு ஜெயசூரியவை சீனாவுக்கு வருமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு பலமிக்கது எனவும், புதிய அரசாங்கத்தின் வருகையின் பின்னர் இரண்டு தரப்பும் படிப்படியாக தமது உறவை விருத்திசெய்துக்கொண்டதாக சீன தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

Facebook Comments