கண்டிப் பிரதேசத்தில் பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவத்துடன் தொடர்புடைய வர்த்தகர் நிமால் பீரிஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

எதிர்வரும் ஆகஸ்ட் 8 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கண்டிப் பிரதேசத்தில் நடாத்தப்பட்டு வந்த உளநல விருத்திக்கான வதிவிடப் பயிற்சி நெறியில் கலந்துகொண்ட மாணவியர்களில் 9 பேர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இவ்வாறு தங்கியிருந்த பெண் பிள்ளைகள் 17 பேரில், 15 வயதுக்கும் 17 வயதுக்கும் இடைப்பட்ட 9 பேர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்பட்டுள்ளதாக மருத்துவ பரிசோதனை அறிக்கை குறிப்பிடுவதாக பொலிஸார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments