காதலிக்க மறுத்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவியை, கத்தியால் குத்திவிட்டு தப்பிய இளைஞரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

இந்திய , தமிழக கரூர் மாவட்டம் செல்லாண்டிபாளைத்தை சேர்ந்தவர் கிருத்திகா. பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த சுரேஷ் என்ற இளைஞர், கிருத்திகாவை ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு கிருத்திகா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கிருத்திகாவின் வீட்டுக்கு சென்ற சுரேஷ், கத்தியை காட்டி மிரட்டி தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார்.

பின்னர் கிருத்திகாவையும், அவரது பாட்டியையும் கத்தியால் கைகளில் தாக்கிவிட்டு தப்பிவிட்டார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் தப்பியோடிய சுரேஷை தேடி வருகின்றனர்.

Facebook Comments