ஜெனிவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இன ரீதியான புறக்கணிப்பு தொடர்பான அமர்வுகளில் இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள், சிறுபான்மை இனங்களின் மதசுதந்திரம் உட்பட்ட பல்வேறு விடயங்கள் ஆராயப்படவுள்ளன.

இந்த அமர்வுகள் கடந்த 2ஆம் திகதி ஆரம்பித்து ஆகஸ்ட் 26ஆம் திகதி வரை நடைபெறுகின்றனஇதில் இலங்கை தொடர்பான விடயங்கள், எதிர்வரும் 15 மற்றும் 16ஆம் திகதிகளில் ஆராயப்படவுள்ளன.

18 என்ற எண்ணிக்கையை கொண்ட நிபுணர்களின் முன்னால் இந்த விடயங்கள் ஆராயப்படவுள்ளன.

இதன்போது உள்ளக இடப்பெயர்வின் பின்னர் மீளக்குடியேறிய மக்களின் நிலைமை, தமிழ்முஸ்லிம் மக்களின் இடப்பெயர்வு, வேடுவ சமூகத்தின் நிலைமை, காணாமல் போன ஊடகவியலாளர்கள், பொதுமக்கள், மனித உரிமை பாதுகாவலர்களின் விடயங்கள் தொடர்பில்இலங்கை அரசாங்கம் விளக்கமளிக்கவுள்ளது.

Facebook Comments