கினிகத்தேன பொல்பிட்டியவில் புதிகாக நிர்மாணிக்கப்படும் போட்லெண்ட் நீர் மீன்சார நிலையத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டிய தெரிவித்தார்.

பாதிக்கப்படவர்களை இன்று காலை சந்தித்து உரையாடிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

போட்லெண்ட் நீர்மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு வரும் நிலையில், அனர்த்தம் காரணமாக 37 குடியிருப்பாளர்களை அவ்விடத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர்.

பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு தற்காலிக நிவாரணமாக மாதாந்தம் தலா 30000 ரூபா மின்சார சபையினால் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட 37 குடியிருப்பாளர்களை வேறு இடங்களில் குடியமர விரைவில் அரசினால் நட்டஈடு வழங்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.

காசல்ரீ நீர்தேக்க பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படும் கட்டடம் தொடர்பில் ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்டதாகவும், அது தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்கள் சந்திப்பின் போது கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுஜித்த பெரேரா, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாச, மஸ்கெலிய மாவட்ட சுதந்திர கட்சியின் அமைப்பளர் ரணசிங்க, அமைச்சின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Facebook Comments