காணாமல் போனோர் தொடர்பில் அமைக்கப்படவுள்ள அலுவலகம் தொடர்பான சட்டமூலத்துக்குஉச்சநீதிமன்றத்தின் ஆலோசனைகளைப் பெறக் கோரி கூட்டு எதிர்க்கட்சியினர் ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேனவுக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் பாராளுமன்றத்தில் குறித்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்படவுள்ளநிலையில்,இதனை உடனடியாக இடைநிறுத்துமாறும் இவர்கள் கோரிக்கை கடிதம்அனுப்பியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கூட்டு எதிர்க் கட்சியின் 22 உறுப்பினர்களின் கையெழுத்திட்டு குறித்த கடிதத்தைஅனுப்பியுள்ளதோடு, குறித்த சட்டமூலமானது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்எனவும் அவர்களது கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments