இலங்கையில் தடுத்து வைக்கப்பட்ள்ள 4 தமிழக மீனவர்களையும், 103 விசைப்படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்த இந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து கடந்த 8ஆம் திகதி மீன்பிடிக்க சென்றவர்களில் 4 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருவதாகக் முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்யும் இலங்கை அரசின் போக்கு பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்படையச் செய்துள்ளது.

இதனால் இலங்கை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 4 மீனவர்களையும், 103 படகுகளையும் மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் வெளியுறவுத்துறை அமைச்சு மூலம் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தனது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

Facebook Comments