புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்படவில்லை என புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜனக ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர்,

இவ்வாறான ஓர் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டமை வருத்தமளிக்கும் வகையில் அமைந்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளித்த போது சகவாழ்வுடன் செயற்பட்டோம்.

எவ்வாறாயினும், விச ஊசி ஏற்றுவதற்கான எவ்வித அவசியம் இருக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டதா என்பது குறித்து சர்வதேச மருத்துவர்களைக் கொண்டு விசாரணை நடத்தப்பட வேண்டுமென வட மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments