முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள செல்வபுரம் கிராமத்தில் கடந்த  செவ்வாய்க்கிழமை சிரமசக்தி வேலைத்திட்டத்திற்ாகன அடிக்கல் நாட்டப்பட்டது, இளைஞர் சேவைகள் மன்றத்தின்நிதி ஒதுக்கீட்டில் சிர சக்தி வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது, குறித்த திட்டத்தின் கீழ் மேற்குறித்த கிராத்தில் விளையாட்டு மைதானத்திற்கு சுற்று வேலி அமைக்கும் வேலைத்திட்டத்திற்கு 75000 ரூபா ஒதுக்கப்பட்டு இன்றுஅதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது,

குறித்த காணிக்கான ஆவணங்களுடன் காணி பிணக்குகளை தீர்தது வைக்கும் பொருட்டு காணி உரிமையாளரால் (எம்யு.ஒட்டு.இந்து 76.செல்வ62 எனும் முறைப்பாட்டு இலக்கத்திற்கு அமைய) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டள்ளது, குறித்த முறைப்பாட்டிற்கமைய காணிபிணக்குகள் தீர்த்து வைக்கப்படும் என கூறப்பட்ட போதிலும் இன்று வரை தீர்த்த வைக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட நபர்தெரிவிக்கின்றார். இதே வேளை குறித்த காணியைஉரிமை கோரி முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் குறித்த நபருக்கெதிராக மற்றுமொரு நபரால் (வ.இல 206-11) வழக்கு தொடரப்பட்டு நடைபெற்று வருகின்றது,
இந்நிலையில் குறித்த காணிஅரச காணியாகையால் அதனை விளையாட்டு மைதானத்திற்கு வழங்குவதற்கு தனக்கு அதிகாரம் உண்டு என தெரிவித்து ஒட்டுசுட்டான் காணி அலுவலர் விமல் அவர்களால் சிரம சக்தி வேலைத்திட்டம்ஆரம்பித்து வைக்கப்பட்டது, முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் வழக்கு இடம்பெற்று வருவதாக பாதிக்கப்பட்டவர்களால் வருகை தந்திருந்த அதிகாரிகளிற்கு தெரியப்புடுத்திய போதிலும் அவர்கள் அதனை ஏற்க மறுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த காணி 1982ம் ஆண்டு குறித்த நபரின் பராமரிப்பில் உள்ளது என்பதனை உறுதிப்படுத்திய நீதிமன்ற தீர்ப்பு கைவசம் உள்ள நிலையில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நீதிமன்ற தீர்ப்பினைஅலட்ியம் செய்யும் செயற்பாட்டில் உள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். மீள் குடியேறி 7ஆண்டுகள் ஆகின்ற நிலையில் குறித்த காணி பிணக்கு உட்பட பல காணி பிணக்குகள் தீர்க்கப்படாத நிலையில் தமக்கான வீட்டு திட்டத்தினையும் மக்களால் பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்க மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
குறித்த பாதிக்கப்பட்ட பெண் யுத்தத்தின்போது தனது கணவரை இழந்துள்ளதுடன், இரு பிள்ளைகள் காணாமல் போயுள்ள நிலையில், தனது கணவரால் பராமரிக்கப்பட்ட காணியையாவது மீட்டு தாருங்கள் என அரச அதிகாரிகளிடம் பலமுறை கையுந்திய போதிலும் பலன் கிடைக்கவில்லை என கவலை தெரிவிக்கின்றார். தனது எஞசிய பிள்ளைகளுடன் மிகுதி காலத்தினை கழிப்பதற்கு அரச அதிகாரிகள் வீட்டுத்திட்டம் உட்பட பலஅரச சலுகைகளை மறுத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவிக்கின்றார்.
1982ம் ஆண்டிற்கும் 2009ம் ஆண்டிற்றும் இடைப்பட்ட காலத்தில் தமது காணிகளை இழந்தோருக்கு மீள அதனை பெற்றுகொள்ள முடியும் என அரசாங்கம் சட்டங்களை காலத்திற்கு காலம் அதிகாரிகளிற்கு அறிவுறுத்திவருகின்ற போதிலும், அதிகாரிகளின் அதிகார போக்கினால் பலர் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நீதிமன்றில் வழக்கொன்று நடைபெற்றுகொண்டிருக்க, அதனையும் மீறி அதிகாரிகள் செயற்படுவது நீதிமன்றினை அவமதிக்கும் செயற்பாடாகவே கருத முடிகின்றது,
குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களால் அவசர பொலிஸ் சேவையை நாடியபோதிலும் பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தரவில்லை என்பது குறிப்பிடதக்கதாகும்.
வடக்கில் இராணுவத்தினரினால் முன்னெடுக்கப்படும் காணி சுவீகரிப்புகள், பௌத்த விகாரை அமைக்கும் செயற்பாடுகள் என பல இடம்பெற்று வரும் சூழலில், அரச அதிகாரிகளின் ஒத்துளைப்புடனே பல பகுதிகளில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கதாகும்.
இந்நிலையில் வடக்கில் காணப்புடும் காணி பிணக்குகள் தொடர்பில் விரைந்து தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என மீள்குடியேற்ற அமைச்சர் கிளிநொச்சிக்கு விஜயம் செய்திருந்த புாது குறிப்பிட்டிருந்தார். யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் காணப்படும் காணி பிணக்குகள் தொடர்பில் எந்தவொரு நபரும் பாதிக்கப்படாதவாறு பிணக்குகள் தீர்த்து வைக்கப்படும் எனவும், குறித்த காணியை ஆட்சி செய்தமைக்கான எந்தவொரு ஆவணத்தினையும் சமர்ப்பித்து பாதிக்கப்பட்ட நபர் காணியை பெற்றுக்கொள்ள முடியும் எனவும்மீள்குடியேற்ற அமைச்சர் பரவிப்பாஞ்சான் மக்களின் காணி விடயம் தொடர்பில் இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலின் போ தெரிவித்திருந்தமை குறிப்பிட தக்கதாகும்.
Facebook Comments