காலாவதி திகதி முடிவடைந்த 2 ஐஸ்கிறீம்களை விற்பனை செய்த வியாபாரிக்கு 4,500 ரூபா அபராதம் விதித்து ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியால் உத்தரவிட்டுள்ளார்.

ஊர்காவற்றுறையில் உள்ள வியாபார நிலையத்தில் காலாவதி திகதி முடிவடைந்த 2 ஐஸ்கிறீம்கள் அப்பகுதி பொதுச் சுகாதார பரிசோதகர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து அதனை விற்பனை செய்த வர்த்தகருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வியாபாரி தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதன் காரணத்தினால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Facebook Comments