கிளிநொச்சியில்  சட்டவிரோதமாக கடத்தப்பட்ட  ஒருதொகுதி மரக்குற்றிகள் சிக்கின
இன்று காலை  கூலர்  வகை வாகனமொன்றில்  சட்டவிரோதமாக கடத்தப்பட்ட  ஒருதொகுதி மரக்குற்றிகளையும்  மற்றும் வாகனச் சாரதியினையும்   கிளிநொச்சி  கண்டாவளைப்பகுதியில்  வைத்து   தர்மபுரம் பொலிசார் மடக்கிப் பிடித்துள்ளனர்
பிடிக்கப்பட்ட வாகனத்தில்  கிட்டத்தட்ட ஐந்து இலட்சம் பெறுமதியான இருபத்தைந்து தேக்கு குறிகளுடன் குறித்த சந்தேக நபரை கைது செய்ததாகவும் நாளையதினம் குறித்த வாகன சாரதியினை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆயர்ப் படுத்த உள்ளதாகவும் தர்மபுரம் பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன
Facebook Comments