கிளிநொச்சி மாவட்டத்தின் படையினரின் வசமிருந்த 142 ஏக்கர் காணி விடுவிப்பு
கிளிநொச்சி மாவட்டத்தின் படையினரின் வசமிருந்த 142 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை  உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் தெரிவித்;துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்;டாவளை கரைச்சி பூநகரி பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில் பொதுமக்களுக்குச்சொந்தமான மற்றும் அரச காணிகள் படையினரின் பயன்பாட்டில் இருந்து வருகின்றது.
இந்நிலையில்  தற்போது காணிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை கிளிநொச்சி  முழங்காவில் துயிலுமில்லக் காணிகள் உள்ளடங்கலாக  ஒரு பகுதிக்காணிகள் மக்கள் பாவனைக்கு  விடுவிக்கப்பட்டுள்ளன. இவ்விடயம் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அவர்களை இன்று மாலை (05-09-2016)தொடர்புகொண்டு கேட்டபோது கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்த காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமை (02-09-2016) அன்று குறித்த காணிகள் தொடர்பான விபரங்கள் தனக்குக் கிடைக்கப்;பெற்றுள்ளதாகவும் இதன்படி படையினரால் குறித்த காணிகள் விடுவிக்கப்;பட்டுள்ளன.
அதாவது கரைச்சிப்பிரதேச செயலர் பிரிவில் உள்ள 109 ஏக்கரும் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் 25 ஏக்கரும் பூநகரி பிரதேச செயலர் பிரிவில் 6 ஏக்கரும்  விடுவிக்கப்பட்டுள்;ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். விடுவிக்கப்;பட்ட காணிகளில் பயிர் செய்கை காணிகள் குடியிருப்புக்காணிகள் என்பனவும் அடங்குகின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். விடுவிக்கப்;பட்ட கா ணிகளிலிருந்து படையினர் வெளியேறி அக்காணிகளை அந்தப்பிரதேச செயலர்களிடம் கையளித்து வருகின்றனர். இன்றைய தினம் (05-09-2016) கரைச்சிப்பிரதேச செயலர் பிரிவில் முன்னர் சிறுவர் இல்லம் இயங்கி வந்த காணிகளில் மற்றும் ஏனைய காணிகளில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளன.
Facebook Comments