பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறீஸ்காந்தராசா அவர்களின் ஏற்பாட்டில் மாற்றுத்திறனாளிகளின் உபயோகத்திற்கென வன்னி நலன்புரி சங்கத்தினார் – லண்டன்  மற்றும் Phலளழை நேவ லண்டன் ஆகியோரல் அனுப்பிவைக்கப்பட்டிருந்த விசேட உபகரணங்கள் இன்றைய தினம் முதற்கட்டமாக கரைதுரைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது
இன்று காலை 11.00 மணியளவில் வற்றாப்பளை கண்ணகை அம்மன் அலய முன்றலில் ஆரம்பமாகிய நிகழ்வில் வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய பரிபாலனசபையினர் மற்றும் வன்னி நலன்புரி சங்கம் லண்டன் அமைப்பின் போசகர் திரு உதயனன் மற்றும் கரைதுரைப்பற்று பிரதேச செயலக சமூகசேவைகள் கிளையின் உத்தியோகத்தர் வற்றாப்பளை கிராம சேவகர் மற்றும் புதுக்குடியிருப்பு ஒளிரும் வாழ்வு அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர். இதன்போது மாற்றுத்திறனாளிகள் உபயோகப்படுத்துகின்ற சக்கர நாற்காலிகள் மற்றும் ஊன்றுகோல்கள் இருக்கை வசதிகொண்ட மலசலகூட உபகரணங்கள் என அத்தியாவசியமான உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன
இந்நிகழ்வில் கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி அவர்கள் யுத்தத்தின் வடுக்களை சுமந்து வாழுகின்ற எமது மாற்றுத்திறனாளிகளிற்காக லண்டன் வன்னி நலன்புரி அமைப்பினர் வழங்கியுள்ள இவ்வுதவியானது எம்மைப்பொருத்தவரையில் மிகப்பெரும் பேரூதவியாக இருக்கின்றது மாற்றுத்திறனாளிகளிற்கான தேவைகளை எமது சமூகம் விசேடமாக கருத்திற்கொள்ள வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் நலன்களையும் அவர்களுக்குரித்தான உரிமைகளை பேணவும் அவர்களுக்குரிய உரிய இடத்தினை வழங்கவும் எமது சமூகம் முன்வரவேண்டுமெனவும் தெரிவித்தார். இந்நிகழ்வின் அடுத்த கட்டமாக ஒட்டுசுட்டான் பிரதேச மாற்றுத்திறனாளிகளிற்கான மற்றும் வவுனியா மன்னார் மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் அமைப்பினர்க’கும் இவ்வுதவிகள் வழங்கிவைக்கப்படவுள்ளன எனவும் தெரிவித்தார்

Facebook Comments